இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கான அந்நியத் தொழிலாளர் விண்ணப்பம் மீண்டும் திறக்கப்படுவதற்கான மனிதவள அமைச்சின் நடவடிக்கை

முடித்திருத்தும் நிலையங்கள், டெக்ஸ்டைல்ஸ் மற்றும் நகைக்கடைகளுக்கு விதிக்கப்பட்ட அந்நியத் தொழிலாளர் தடை குறித்து உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் மற்றும் உள்நாட்டு வர்த்தக வாழ்க்கை செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ சாலாவூடின் ஆயோப் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக மனித வள அமைச்சர் வ சிவகுமார் இன்று தெரிவித்தார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த மூன்று துறைகளில் அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள தடை போடப்பட்டது.

மேலும் 2019 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு முழுமையாக மூடப்பட்டது.

இந்த மூன்று துறைகளும் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட முதலாளிகளின் கோரிக்கையில் ஒற்றுமை அரசாங்கம் மிகவும் அக்கறை கொண்டுள்ளது.

இது எப்படி இருப்பினும் வெளிநாட்டு தொழில் அவர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான எந்த ஒரு அரசாங்கக் கொள்கையும் பின்பற்ற வேண்டிய செயல்முறை உள்ளது.

இது உள்துறை அமைச்சு மற்றும் மனித வள அமைச்சு கூட்டுக் குழுக் கூட்டத்தின் மட்டத்தில் கொண்டு வரப்பட வேண்டும்.

இந்த மூன்று துறைகளையும் மீண்டும் திறப்பது தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் செயல்படுத்துவதற்கு முன்னர் கூட்டுக் குழு கூட்டத்தில் இருந்து ஏதேனும் பரிந்துரைகள் அமைச்சரவையின் பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் .

மார்ச் 2023 இல் காலாவதியாகும் மூன்று துறையில் தற்போதுள்ள தற்காலிக வேலை வருகை அனுமதி ( PLKS) வைத்திருப்பவர்கள் பொருத்தமான காலத்திற்கு நீடிக்கப்படுவதை கருத்தில் கொள்ள உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோனுடன் விவாதித்தேன் அவர் சொன்னார்.

ஒரு துறை அல்லது துணைத் துறையை முடக்குதல் அல்லது மீண்டும் திறப்பது உட்பட வெளிநாட்டு தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு தொடர்பான எந்த ஒரு அரசாங்கக் கொள்கையும் தற்போது நிலைமை மற்றும் முதலாளிகளின் உண்மையான தேவைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளும் என்று நான் கூற விரும்புகிறேன் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles