ஷா ஆலமில் ஆல் இன் ஆல் உணவகத்தை மனிதவள அமைச்சர் வ.சிவக்குமார் திறந்து வைத்தார்

ஷா ஆலம் செக்சன் 25, ஸ்ரீ மூடா எக்சிஸ் தொழில்பேட்டைப் பகுதியில் அமைந்துள்ள ஆல் இன் ஆல் உணவகத்தை மனிதவள அமைச்சர் வ.சிவக்குமார் இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் பிரிமாஸ் எனப்படும் இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சுரேஷ் உட்பட அதன் பொறுப்பாளர்கள், பிரமுகர்கள் உள்பட திரளானோர் கலந்து சிறப்பித்தனர்.

சைபர்ஜெயாவில் தங்கள் முதல் உணவகத்தை வெற்றிகரமாக நடத்தி வரும் இதன் உரிமையாளர்கள் இங்கு இரண்டாவது கிளையைத் திறந்துள்ளனர்.

ஆல் இன் ஆல் உணவகத்தின் நிறுவனரும் இயக்குநருமான தீபன் கூத்தப்பெருமாள் கூறுகையில் உணவகத் துறையினர் எதிர்நோக்கி வந்த அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறைப் பிரச்சனைக்கு விரைவாக தீர்வு கண்ட அமைச்சர் சிவக்குமாருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles