

இந்திய இளைஞர்கள் உணவகம் போன்ற வர்த்தகத் துறைகளில் துடிப்புடன் ஈடுபடுவது கண்டு தாம் பெரிதும் மகிழ்ச்சியடைவதாக மனித வள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார்
ஷா ஆலம் செக்சன் 25, ஸ்ரீ மூடா எக்சிஸ் தொழில்பேட்டைப் பகுதியில் அமைந்துள்ள ஆல் இன் ஆல் உணவகத்தை மனிதவள அமைச்சர் வ.சிவக்குமார் இன்று திறந்து வைத்து உரையாற்றினார்.
சைபர்ஜெயாவில் தங்கள் முதல் உணவகத்தை வெற்றிகரமாக நடத்தி வரும் இதன் உரிமையாளர் தீபன் இப்போது ஷா ஆலமில் இரண்டாவது கிளை உணவகத்தை திறந்துள்ளனர்.
வர்த்தகத்தை விரிவுபடுத்தும் நடவடிக்கையை அவர் மிகவும் நிதானத்துடனும் கவனத்துடனும் மேற்கொள்வது பாராட்டுக்குரியது.
உணவகத் துறை எதிர்நோக்கி வரும் அந்நியத் தொழிலாளர் பிரச்சனைக்கு அரசாங்கம் தீர்வு கண்டுள்ளதாக கூறிய மனித வள அமைச்சர் சிவகுமார், இந்தியர்களின் இதர பாரம்பரியத் துறைகள் எதிர்நோக்கும் ஆள்பலப் பிரச்சனைக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.

