
பினாங்கு மாநிலத்தில் இப்போது 28 தமிழ்ப் பள்ளிகள் உள்ளன.
இந்தப் பள்ளிகளின் எண்ணிக்கையை குறைக்க முயற்சிக்கும் எந்த ஒரு தரப்பின் செயலையும் கண்டு நான் அமைதியாக இருக்க மாட்டேன் என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் டாக்டர் பி இராமசாமி எச்சரித்தார்.
இந்த நாட்டில் தாய்மொழி பள்ளிகள் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும்.
அந்த வகையில் சுங்கை பாக்காப் தமிழ்ப் பள்ளி கட்டுவதில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு கல்வி அமைச்சு தீர்வு காண வேண்டும்
சுங்கை பாக்காப் தமிழ்ப் பள்ளியை கட்டி முடிக்க மத்திய அரசாங்கத்தால் உதவிட முடியவில்லை என்றால் பள்ளிக்கூட நிர்வாகம் பொதுவில் நின்று நிதியைத் திரட்டும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் என டாக்டர் இராமசாமி தெரிவித்தார்.

