தொப்புள் கொடி உறவுகளுக்கு OCI விண்ணப்பத்தைஎளிமையாக்குங்கள்! மனித வள அமைச்சர் சிவகுமார் வேண்டுகோள்

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு
இந்திய அரசு வழங்கும் வெளிநாட்டு குடியுரிமை (OCI – Overseas Citizens of India) விண்ணப்பத்தையும் நிபந்தனைகளையும்
எளிமையாக்கும்படி மனித வள அமைச்சர் வ. சிவகுமார் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக தொப்புள் கொடி உறவுகளுக்கு OCI அட்டைக்கான விண்ணப்பம் எளிமைப்படுத்த வேண்டும்.

OCI அட்டையை பெறுவதற்கு செய்யப்படும் விண்ணப்பத்தில் பல கேள்விகளை பூர்த்தி செய்ய முடியாமல் இருக்கிறது.

இதனால் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாததால் வெளிநாட்டு குடியுரிமை பெறுவதில் மலேசிய இந்தியர்கள் பல சிரமங்களை எதிர் நோக்கி கொண்டிருக்கிறார்கள்.

பராவாசி மாநாட்டில் கலந்து கொண்டபோது இந்தியாவுக்கான வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரிடம் இது பற்றி விரிவாகப் பேசினேன்.

இந்தியாவை இன்னமும் மலேசிய இந்தியர்கள் தங்களது பூர்விகமாகக் கருதுகின்றனர்.

இந்தியா – மலேசிய இடையிலான உறவு காலத்தால் அழிக்க முடியாத தொப்புள் கொடி உறவாகும்.

தங்களது மூதையர்கள் இந்தியாவில் பிறந்ததால் தொப்புள் கொடி உறவு தொடர்ந்து நீடித்திருக்க மலேசிய இந்தியர்கள் இந்த OCI அட்டைக்கு விண்ணப்பம் செய்கிறார்கள்.

OCI அட்டை வைத்திருப்பவர்கள் Multiple Entry எனப்படும் வாழ்நாள் விசாவை பெறலாம்.

மரியாதை நிமித்தமாக இந்தியாவுக்கு வருகை புரிந்திருக்கும் நான் இது தொடர்பில் இந்திய அரசு மற்றும் வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரிடம் மீண்டும் பேச்சுவார்த்தையை நடததி விண்ணப்பத்தை எளிமையாக்கும்படி கேட்டுக் கொள்வேன் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles