ஆறு மாநிலங்களில் வெற்றி பெறும் வாய்ப்புபிரகாசமாக இருக்கிறது!மனித வள அமைச்சர் சிவகுமார் நம்பிக்கை

விரைவில் நடைபெறவிருக்கும் ஆறு மாநில சட்டமன்றத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கம் வெற்றி பெறும் வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது என்று மனித வள அமைச்சர் வ சிவகுமார் நம்பிக்கை தெரிவித்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறது.

குறிப்பாக அனைத்து இனங்களும் தன்மை அடையும் வகையில் அரசு பல திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குகிறது.

இந்த நான்கு மாதங்களில்
மக்களுக்கு அதிக நன்மைகள் செய்திருப்பதால் ஆறு மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று மனித வள அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.

மிக விரைவில் சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான், கெடா, கிளாந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles