
கோலாலம்பூர் ஏப்.5
12 ஆவது மலேசிய திட்டத்தின் பினாங்கு மாநிலத்தில் உள்ள புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனையில் புதிய CT Scan கருவி பொருத்தப்படும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
ஜசெக கட்சியின் சார்பில் செனட்டராக பதவி ஏற்றுள்ள டாக்டர் ஆர். லிங்கேஸ்வரன் கடந்த வாரத்தில் மேலவையில் இது பற்றி கேள்வியை எழுப்பினார்.
பத்து லட்சம் மக்கள் வாழும் செபெராங் பிறையில் அதுவும் ஒரு மருத்துவமனையில் மட்டுமே இந்த CT Scan கருவி உள்ளது.
பினாங்கு மாநில மக்கள் நலனை கருத்தில் கொண்டு பினாங்கில் மருத்துவமனையில் CT Scan பொறுத்தப்பட வேண்டும் என்று கடந்த வாரத்தில் மேலவையில் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் கோரிக்கையை முன் வைத்தார்.
இந்நிலையில் இவர் முன் வைத்த கோரிக்கையை பரிசீலித்த சுகாதார அமைச்சு 12 ஆவது மலேசிய திட்டத்தின் கீழ் 50 லட்சம் வெள்ளி செலவில் பினாங்கு செபெராங் பிறை மருத்துவமனையில் CT Scan பொருத்தப்படும் என சுகாதாரத் துணை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
நான் முன் வைத்த கோரிக்கையை விரைவில் பரிசீலித்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சுக்கு தமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

