

கோலாலம்பூர், ஏப் 8
மக்கள் ஓசை நாளிதழ் நிர்வாகத்தின் சிறப்பு அழைப்பை ஏற்று மரியாதை நிமித்தமாக மனித வள அமைச்சர் வ சிவகுமார் இன்று மக்கள் ஓசை அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்.
மனித வள அமைச்சர் சிவகுமாரை வரவேற்ற மக்கள் ஓசை இயக்குநர் டத்தோ கோபாலகிருஷ்ணன் பின்னர் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பித்தார்.
மனித வள அமைச்சின் அரசியல் செயலாளர் ரவீந்திரன், தனிச் செயலாளர் மகேஸ்வரி, சிறப்பு அதிகாரி சுகுமாரன் பெரியசாமி, பத்திரிகை செயலாளர் சின் , அமைச்சரின் தமிழ் பத்திரிகை செயலாளர் செ.வே. முத்தமிழ் மன்னன் மற்றும் சொக்சோ நிறுவனத்தின் இயக்குநர் டி கண்ணன் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
மக்கள் ஓசை நாளிதழ் வெளியிடும் செய்திகள் தன்மை குறித்து மூத்த பத்திரிகையாளரும் ஆசியருமான பி.ஆர். இராஜன் அமைச்சரவை குழுவினருக்கு விளக்கம் அளித்தார்.
மனித வள அமைச்சு மற்றும் தமிழ் ஊடகங்கள் மத்தியில் பரஸ்பர உறவை மேம்படுத்தும் வகையில் மனித வள அமைச்சர் சிவகுமாரின் வருகை அமைந்திருந்தது.
மக்கள் ஓசை ஆசிரியர் குழு ஆலோசகர் இரா. முத்தரசும் இந்த சந்திப்பில் கலந்து சிறப்பித்தார்.

