ஏழ்மை நிலையில் வாழும்மக்களுக்கு உணவு நன்கொடைகளை கணபதி ராவ் வழங்கினார்

நோன்பு பண்டிகையை முன்னிட்டு பல தொகுதிகளைச் சேர்ந்த 100 ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு அடிப்படை உணவு நன்கொடைகள் வழங்கப்பட்டன.

2017 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்படும் இந்நிகழ்ச்சியில் அரிசி, மாவு, சர்க்கரை, பிஸ்கட், டின் உணவு மற்றும் பால் பொருள்கள் வழங்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் தெரிவித்தார்.

நன்கொடைகளைப் பெற்றவர்கள் கோத்தா கெமுனிங், பத்து திகா, சுங்கை கண்டிஸ், கோத்தா அங்கெரிக் தொகுதிகள் மற்றும் சிலாங்கூர் அரசாங்கச் செயலர் நலன்புரி கிளப்பைச் (SUK) சேர்ந்தவர்கள் என அவர் கூறினார்.

நோன்பு காலங்களில் அவர்களின் சுமையைக் குறைக்க உதவுவதற்கும் அடிப்படை உணவை சிறிய நன்கொடையாக வழங்குகிறோம்,” என்று அவர் கூறினார்.

இனம் மற்றும் நேரத்தைப் பொருட்படுத்தாமல் ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்குத் தொடர்ந்து உதவுவதற்குச் சமூகத்தில் நல்ல பண்புகளை இந்த திட்டம் வளர்க்கும் என்றும் அவர் நம்பினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles