

இவ்வாண்டு பங்குனி உத்திர திருவிழா நாடு முழுவதும் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
அந்த வகையில் பேராக் மாநிலத்தில் பத்து காஜா சுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
ஹராப்பான் மலேசிய கலை கலாச்சார சமூக நல இயக்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் சுகுமாரன் கன்னி – டத்தின் ஷீலா தம்பதியர் தலைமையில் ஆயிரம் பக்தர்களுக்கு சுவையான பானங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
காலையில் சிற்றுண்டி முடியும் பிற்பகுதியில் அன்னதானமும் வழங்கப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு சுவையான பானங்களும் வழங்கப்பட்டது.
இனி வரும் காலங்களில் இந்த அன்னதானம் தொடரும் என்று டத்தோ டாக்டர் சுகுமாரன் கன்னி தெரிவித்தார்.

