
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் மேலவை உறுப்பினர்களாக பதவி ஏற்றுள்ள ம இகா தேசிய உச்சமன்ற உறுப்பினர் டத்தோ சிவராஜ் இந்தியர்களின் குரலாக மேலவையில் ஒலிக்க வேண்டும் என்று Shadofax bikers Harley Davidson கிளப் தலைவர் டத்தோ ஆனந்த கேட்டுக் கொண்டுள்ளார்.
டத்தோ சிவராஜூக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் Shadofax bikers கிளப் ஏற்பாட்டில் நடைபெற்ற பாராட்டு விழாவில் 20 க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் வீரர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த காலங்களில் மக்களுக்கு நிறைய சேவைகளை வழங்கிய டத்தோ சிவராஜ் மேன் மேலும் இந்திய சமுதாயத்திற்கு சிறப்பான சேவைகளை வழங்க வேண்டும் என்று டத்தோ ஆனந்த கேட்டுக் கொண்டார்.

