

பேராக் மாநிலத்தில் தம்புன் நாடாளுமன்ற தொகுதியில் புதிய மின்சுடலை விரைவில் நி்ர்மாணிக்கப்படும்.
இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த மின்சுடலை தற்போதைய தஞ்சோங் ரம்புத்தான் சமயபுர அருள்மிகு மகா மாரியம்மன் ஆலய பராமரிப்பில் இருந்து வரும் இடுகாட்டில் நிர்மாணிக்கப்படும் என்று தம்புன் நாடாளுமன்ற தொகுதியின் பிரதமரின் சிறப்பு அதிகாரி ஆர்.சுரேஸ் குமார் தெரிவித்தார்.
இந்த மின்சுடலையை நிர்மாணிக்க ஆலய நிர்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்கும்படியும், இத்திட்டத்தினால் அனைவருக்கும் நன்மையே.
இந்த மின்சுடலை போர்ட்டிக்சன் தொகுதியை பின்பற்றி செயல்வடிவில் கொண்டுவரப்படும்.
அதற்கான, ஏற்பாடுகள் வரையறுக்கப்பட்டு அமலாக்கம் செய்யப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
தம்பூன் த்தொகுதியில் அமைந்துள்ள 33 ஆலய நிர்வாகத்தினர் சந்திப்பு கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள், ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் பதிவு செய்யப்பட்டன.
அவற்றில் முதன்மையாக ஒவ்வொரு ஆலயத்திற்கும் கணிசமான மானியத்தை ஆலயங்களுக்கு வழங்கும்படி பரிந்துரை செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் இந்த திட்டம் குறித்து பரிசீலனை செய்து தஞ்சோங் ரம்புத்தான் மாவட்ட இந்து சங்க பேரவையின் ஆதரவோடு மானியங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று சுரேஸ் குமார் உறுதியளித்தார்.

