

ரவாங் பண்டார் கன்ட்ரி ஹோம்ஸ் வட்டாரத்தில் அருள் பாலித்து கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு 30,000 வெள்ளி மானியத்தை மனித வள அமைச்சர்
வ. சிவகுமார் அறிவிப்பு செய்தார்.
ஆலய நிர்வாகத்தின் தலைவர் தனராஜா குப்புசாமி அழைப்பை ஏற்று மனித வள அமைச்சர் வ சிவகுமார் நேற்று ஆலயத்திற்கு சிறப்பு வருகை புரிந்தார்.
மனித வள அமைச்சரின் தனிச் செயலாளர் மகேஸ்வரி, சிறப்பு அதிகாரி சுகுமாரன் பெரியசாமி,சொக்சோ நிறுவனத்தின் இயக்குநர் டி கண்ணன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்
ஆலய நிர்வாகத்தின் சார்பில் மனித வள அமைச்சர் சிவகுமாருக்கு சிறப்புகள் செய்யப்பட்டன.
ரவாங் கன்ட்ரி ஹோம்ஸ் அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தின் கட்டுமான பணிகளுக்கு உதவும் வகையில் 30,000 வெள்ளி வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.
கடுமையான வேலைகளுக்கு மத்தியில் ஆலயத்திற்கு வருகை புரிந்து 30,000 வெள்ளி மானியத்தை அறிவிப்பு செய்த மனித வள அமைச்சர் சிவகுமாருக்கு ஆலயத் தலைவர் தனராஜ் குப்புசாமி நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.

