அந்தாதிப் பறவைகள் புதுக்கவிதை நூலை 20,000 வெள்ளி வழங்கி பெற்றுக் கொண்டார் மனிதவள அமைச்சர் வ. சிவகுமார்

பினாங்குத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத் தலைவர்; பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆலோசகர் சுயமரியாதை சிந்தனையாளர், பத்திரிகையாளர்; பாவலர் செ. குணாளனின் அந்தாதிப் பறவைகள் புதுக்கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று டான்ஸ்ரீ சோமா அரங்கில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

மனித வள அமைச்சர் வ சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில் தேசிய நிலநிதி கூட்டுறவு தலைமை நிர்வாகி டத்தோ பி.சகாதேவன், எக்கோ வோல்ட்டு மேம்பாட்டு கழகத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ ராஜூ , டத்தோஸ்ரீ ஏ. தெய்வீகன் , ஹராப்பான் மலேசிய கலை கலாச்சார சங்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் சுகுமாரன் கன்னி, டத்தின் ஷீலா தம்பதியர், மலேசிய தெலுங்கு சங்கத்தின் துணைத் தலைவர் சத்யா சுதாகரன் உட்பட மலேசிய திராவிடர் கழகத்தின் பொறுப்பாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

பிரபல எழுத்தாளர் இராமதாஸ் மனோகரன் நூல் ஆய்வு செய்த வேளையில் டத்தோஸ்ரீ தெய்வீகன் வாழ்த்துரை வழங்கினார்.

பின்னர் நூலை வெளியீடு செய்த மனித வள அமைச்சர் சிவகுமார், 20,000 வெள்ளியை வழங்கி முதல் நூலை பெற்றுக் கொண்டார்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு நூலை எழுதி வெளியீடு செய்ய பட்ட கஷ்டங்களை மனித வள அமைச்சர் சிவகுமார் பகிர்ந்து கொண்டார்.

உள்நாட்டு தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு மலேசியர்கள் முழு ஆதரவு வழங்கும் படி அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles