


மலேசிய திருநாட்டில் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் எழுத்தாளர்கள் பட்டறை வரும் ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும் என்று மனித வள அமைச்சர் வ. சிவகுமார் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
தமிழ் எழுத்தாளர்களுக்காக இந்நாட்டில் பட்டறை நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்த பயிற்சி பட்டறை மிகப்பெரிய அளவில் நடத்தப்படும் வேளையில் இதில் அனைத்து எழுத்தாளர்களும் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும் .
பயிற்சி பட்டறை மூலம் தேர்வு செய்யப்படும் பத்து எழுத்தாளர்களின் புத்தகங்கள் சிறந்தவையாக தேர்வு செய்யப்படும்.
இந்த பத்து புத்தகங்களுக்காக முழு செலவை ஏற்றுக் கொள்கிறேன் என்று பலத்த கரவொலிக்கிடையே மனித வள அமைச்சர் சிவகுமார் அறிவித்தார்.
இந்நாட்டில் தமிழ் படைப்புகளுக்கு உயிர் கொடுக்கும் வகையில் தாம் இந்த முயற்சியை கையில் எடுத்திருப்பதாக அவர் சொன்னார்.
பினாங்குத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத் தலைவர்; பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆலோசகர் சுயமரியாதை சிந்தனையாளர், பத்திரிகையாளர்; பாவலர் செ. குணாளனின் அந்தாதிப் பறவைகள் புதுக்கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று டான்ஸ்ரீ சோமா அரங்கில் மனித வள அமைச்சர் சிவகுமார் தலைமையில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
இந்த நூல் வெளியீட்டு விழாவில் மனித வள அமைச்சர் சிவகுமார் இந்த முக்கிய அறிவிப்பை செய்தபோது எழுத்தாளர்கள் கைத்தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

