

மலேசிய திருநாட்டில் தமிழை வாழ வைத்துக் கொண்டிருப்பது தமிழ்ப் பள்ளிகளே என்று மனித வள அமைச்சர் வ. சிவகுமார் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
பல நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்தாலும் அங்கு தமிழ் வாழ்வில்லை.
ஆனால் மலேசியாவில் தமிழ் செம்மையாக வாழ்ந்து கொண்டிருக்கிறது.
தமிழ்ப்பள்ளிகள் மீது நம்பிக்கை வைத்து பெற்றோர்களும் தங்களது .
பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்பி வருவது மிகவும் பாராட்டுக்குரியது.
ஆகவே இந்நாட்டில் தமிழ்ப் பள்ளிகள் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும் என்றால் 528 தமிழ்ப் பள்ளிகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
இந்நாட்டில் குறைந்த மாணவர்களை கொண்டிருக்கும் தமிழ்ப் பள்ளிகள் மூட வேண்டிய அவசியம் இல்லை.
இந்தியர்கள் அதிகம் வாழும் இடங்களில் இந்த தமிழ்ப் பள்ளிகளை இட மாற்றம் செய்தாலே போதுமானது.
தமிழ்ப் பள்ளிகள் இடமாற்றம் செய்வதற்கு ஏதுவாக மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முதலில் நிலங்கள் உறுதி செய்யப்பட வேண்டும் .
இதற்கான முயற்சிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்று பினாங்கு தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர், சுயமரியாதை, சிந்தனையாளர், பத்திரிகையாளர் கவிஞர் செ. குளாணனின் அந்தாதிப் பறவைகள் புதுக்கவிதை நூலை வெளியீடு செய்து உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

