

மனிதவள அமைச்சர் வ சிவகுமார் விடுமுறையில் செல்ல தேவையில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார்.
அந்நிய தொழிலாளர்கள விவகாரம் தொடர்பில் மனிதவள அமைச்சின் இரண்டு அதிகாரிகளை எம்ஏசிசி கைது செய்து விசாரணை நடத்தியுள்ளது.
இந்த விவகாரம் இன்னும் விசாரணையில் உள்ளது.
மேலும் இதுவரை எந்தவொரு குற்றச்சாட்டும் முன் வைக்கப்படாததால் எந்தவொரு தரப்பினரும் தாங்களாகவே கோரிக்கையை வைக்க முடியாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மனிதவள அமைச்சர் வ சிவகுமார் எம்ஏசிசி எழுப்பிய விவகாரத்தில் பதில் அளிக்க அழைக்கப்பட்டார்கக் கூறப்பட்டதை தவிர வேறு எந்த நோட்டீஸையும் நாங்கள் வழங்குவது ஏற்புடையதல்ல என்று அவர் கூறினார்.
இதனிடையே போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறுகையில் எம்ஏசிசி நடத்தி வரும் விசாரணையில் மனித வள அமைச்சர் சிவகுமார் முக்கிய நபர் (suspek) இல்லை என்பதால் அவர் விடுமுறையில் செல்ல எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று சொன்னார்.
இந்த விசாரணையில் மனித வள அமைச்சர் சிவகுமார் முக்கிய நபர் இல்லை என்பதை நாங்கள் இதுவரை தெரிந்த கொண்டோம்.
எம்ஏசிசி நடத்தி வரும் விசாரணைக்கு மனித வள அமைச்சின் அமைச்சர் என்ற முறையில் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறார் என்றார் அவர்.
மனிதவள அமைச்சர் சிவகுமார் விடுமுறையில் செல்லுமாறு பிரதமரிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை என்று அவர் தெரிவித்தார்.

