

புத்ரா ஜெயா, ஏப்ரல் 17-
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் HRD Corp எனப்படும் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் மூலம்
தேசிய பயிற்சி வாரத்தை
(HRD Corp National Training Week (NTW) 2023) நாடு தழுவிய அளவில் நடைபெறுகிறது.
N ational Training Week (NTW) 2023 என்பது நாடு தழுவிய பயிற்சி நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளின் வாரமாகும்.
மலேசியா முழுவதும் மற்றும் அனைத்து மலேசியர்களுக்கும் National Training Week இலவசமாக வழங்கப்படுகிறது.
மனிதவள அமைச்சு – HRD Corp, அரசாங்க அமைப்புகளின் ஏஜென்சிகள், தொழில்துறை வீரர்கள், தனிநபர்கள், தொழில் சங்கங்கள், கல்வியாளர்கள் இந்த பயிற்சியை
வழங்குநர்கள்.
குறிப்பாக இந்த பயிற்சி திட்டத்தில் 5,000 பயிற்சியாளர்கள் 1 லட்சத்து 25,000 பேருக்கு பயிற்சியை வழங்குவார்கள்.
பாலர் பள்ளி மாணவர்கள் உட்பட முதியோர்களும் இதில் இடம் பெறுவார்கள். இந்த பயிற்சி வாரம் ஐந்து லட்சம் மணி நேரத்தை எடுத்துக்கொள்ளும் என்று அவர் சொன்னார்.
National Training Week மே 22 முதல் 28 வரை நடைபெற்றது என்று மனித வள அமைச்சர் வ சிவகுமார் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
புத்ரா ஜெயா லீ மெரிடின் தங்கும் விடுதியில் இன்று காலையில் தேசிய பயிற்சி வார்த்தை மனித வள அமைச்சர் சிவகுமார் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ காலிட் நோர்டின், HRD Corp தலைவர் டத்தோ இராஜசேகரன் மற்றும் எச்ஆர்டி கோர்ப் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ சாகுல் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

