விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன் என்பதற்காக பதவி விலக மாட்டேன்! மனிதவள அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

கோலாலம்பூர், ஏப்ரல் 28
எம்ஏசிசி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன் என்ற காரணத்திற்காக நான் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என்று மனிதவள அமைச்சர் வ. சிவக்குமார் உறுதியாக தெரிவித்தார்.

எனது அதிகாரிகளை விசாரணைகளுக்காக எம்ஏசிசி தடுத்து வைத்தது.
அதே வேளையில் இந்த விசாரணைக்கு உதவும் பட்சத்தில் என்னையும் அழைத்தது.

இந்த விசாரணை காரணமாக வைத்து என்னை அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டுமென சிலர் வலியுறுத்தி வருகிறார்கள்.

விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன் என்பதை காரணமாக வைத்து அமைச்சர் பதவியில் இருந்து நான் விலக மாட்டேன்.

இந்த முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன்
.
அதே வேளையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் நான் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என்று ஆணித்தரமாக கூறியுள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தில் எந்த ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றாலும் அது பிரதமரின் உரிமையாகும்.

ஆகவே, நான் பதவி விலக வேண்டுமா வேண்டாமா என்பதை பிரதமர் முடிவு செய்யட்டும் என்று அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார்.

இதனிடையே
மனிதவள அமைச்சர் சிவக்குமார் எம்ஏசிசி விசாரணைக்கு மட்டுமே அழைக்கப்பட்டார்.

அவர் மீது எந்தவொரு குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவில்லை.
இதனால் அவர் ஓய்வில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி கூறியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles