பினாங்கு தெற்கு மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததில் பலத்த ஏமாற்றம்! மாணவர்களின் எதிகாலம் கேள்விக்குறி

பினாங்கு தெற்கு மறுசீரமைப்பான PSR பி.எஸ்.ஆர் திட்டத்திற்கான முன்மொழியப்பட்ட மறுசீரமைப்பு மற்றும் அகழ்வாராய்ச்சி பணிகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை சுற்றுச்சூழல் துறையால் அங்கீகரிக்கப்பட்டதை கேள்விப்பட்டு பினாங்கின் பூவுலகின் நண்பர்கள் இயக்கம் ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்திருப்பதாக அந்த சுற்றுச்சூழல் இயக்கத்தின் பொதுச்செயலாளர் மகேஸ்வரி சங்கரலிங்கம் தெரிவித்தார்.

மீனவர் சங்கம் மற்றும் பினாங்கு தென் மாவட்ட மீனவர் சங்கம் மற்றும் இங்குள்ள மீனவர் கிராமங்களின் அனைத்து பிரிவுகள் உட்பட மீனவர்கள் கவலை அடைந்திருப்பதோடு தங்களின் ஆட்சேபனைகளை எழுப்பி இருப்பதாக அவர் கூறினார்.

தொழில்நுட்ப மறு ஆய்வுக் குழுவில் பூவுலகின் நண்பர்கள் இயக்கம் ஓர் உருப்பினராக இருந்தாலும் சுற்றுச்சூழல் மீதான கவலைகளுக்கு ஆதரவாக நாங்கள் எங்கள் ஆட்சேபனைகளை தெரிவித்ததாக மகேஸ்வரி கூறினார்.

மீன்வளத் துறை, மீன்வள ஆராய்ச்சி நிறுவனம், மீன்வளம் தொடர்பான ஏஜென்சிகள் மற்றும் மறுசீரமைப்பு மீன்வளத் துறையை பாதிக்கும் என்று தாங்கள் கூறியதாக அவர் கூறினார்.

மீனவளம் என்பது மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவை கடல்சார் பல்லுயிர் பெருக்கத்தைக் கொண்டதாக உள்ளது.

இந்த திட்டமானது மணல் மற்றும் பாறைகள் போன்ற பிற வற்றை பாதிக்கும்.

மொத்தம் 4,500 ஏக்கர் (1,821.1 ஹெக்டேர்) பரப்பளவைக் கொண்ட மூன்று மீட்டெடுக்கப்பட்ட தீவுகளைக் கொண்ட முன்மொழியப்பட்ட திட்டத்திற்கு 207,000,000 கன மீட்டர்கள் என மதிப்பிடப்பட்ட நிரப்புப் பொருள் தேவைப்படுகிறது.

மீட்டெடுக்கப்பட்ட தீவுகளின் விளிம்புப் பாதுகாப்பிற்காக, 4,500,000 கன மீட்டர்கள் பாறைகளை உருவாக்குவதற்குத் தேவையான மொத்த பாறை அளவு. மணல் மற்றும் பாறைகளை பெறுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஒட்டுமொத்த பாதிப்புகளாக சேர்க்கப்பட வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டதாக மகேஸ்வரி கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles