
ஐபிஎப் தலைமையகத்தின் ஆதரவுடன் ஐபிஎப் பினாங்கு மாநிலத்தின் ஏற்பாட்டில் ஐபிஎப் கட்சியின் தோற்றுநர் புரட்சித் தலைவர் டான் ஶ்ரீ டத்தோ எம் ஜி பண்டிதன் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு 30-4-2023 மதியம் 2.30 மணியளவில் ஜுரு தமிழ் பள்ளி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பினாங்கு மாநில தலைவர் Hon.Dr.ச.குமரேசன் தலைமையில் நடைபெற்றும் இந்த நிகழ்வில் கட்சியின் தேசிய தலைவர் டத்தோ து.லோகநாதன், கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் மற்றும் அழைக்கப்பட பிரமுகர்களின் . நினைவஞ்சலி உரை மற்றும் கவிஞர்களின் கவிதஞ்சலி, கட்சியின் முத்த உறுப்பினர் ஒருவர்க்கு டான்ஶ்ரீ டத்தோ எம் ஜி பண்டிதன் விருது வழங்கப்படும்.
இந்த நாட்டிலே இருக்கின்ற பாட்டாளி சமுதாயம் அரசியலிலும் கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று துருநோக்கு சிந்தனையுடன் தன் போராட்டத்தை தொடங்கி தனக்கென மிகப் பெரிய இளைஞர் படையையே தன் வசம் வைத்திருந்து இன்றைய இளைஞர்கள் இன்றைய தலைவர்கள் என்று முழக்கமிட்டு அதை நிரூபனம் ஆகி காட்டிய ஒரே தலைவர் மலேசியா இந்தியர்களின் புரட்சித்தலைவர்
டான்ஶ்ரீ டத்தோ எம் ஜி பண்டிதன் மட்டுமே.
அவருடைய 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்விற்கு கட்சி பேதம் இன்றி அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் என்று
ஐபிஎப் பினாங்கு மாநில செயலாளர் தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

