
சொந்த தொழில் செய்பவர்களுக்கு சொக்சோவின்
சமூக நல பாதுகாப்பு திட்டம் துணை புரிகிறது!
மனிதவள அமைச்சர் சிவகுமார் பெருமிதம்
கோலாலம்பூர் ஏப்ரல் 28 –
சொந்த தொழில் செய்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சொக்சோ சமூக நல பாதுகாப்பு திட்டம் பெரிதும் துணை புரிகிறது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இன்று அறிவித்தார்.
கோவிட் 19 காலக் கட்டத்திற்கு பின்னர் நாட்டில் சொந்த தொழில் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்போது பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மலேசியர்கள் சொந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் சொக்கோ சமூக நல பாதுகாப்பு திட்டத்தில் பங்கேற்று பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார் அவர்.
தொழிலாளர்கள் மற்றும் சொந்த தொழில் செய்பவர்கள் மீது மனித வள அமைச்சு எப்போதும் அக்கறை கொண்டுள்ளது.
அந்த வகையில் சொந்த தொழில் செய்பவர்கள் அனைவரும் சொக்சோ சமூக நல பாதுகாப்பு திட்டத்தில் பங்கேற்பது மிகவும் அவசியமானது என்று அவர் சொன்னார்.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு RTM TV BERITA வுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போது மனிதவள அமைச்சர் சிவகுமார் இவ்வாறு தெரிவித்தார்
கூடுதல் விவரங்களுக்கு https://www.perkeso.gov.my/ அகப்பகத்தை நடலாம்.

