

கோலாலம்பூர் ஏப்ரல் 30-
நாட்டில் புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்றாக விளங்கி கொண்டிருக்கும் பிரிக்பீல்ட்ஸ் ஸ்ரீ சக்தி கற்பக விநாயகர் கோயிலில் வரும் மே 5 ஆம் தேதி 16 ஆம் ஆண்டு ஸ்ரீ அகத்தியர் சித்தர் குருபூஜை விழா மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
ஸ்ரீ அகத்தியர் குருபூஜை விழா ஏற்பாட்டுக் குழு தலைவரும் அகத்தியர் பெருமான் சீடருமான எஸ். பக்தவத்சலம் தலைமையில் மே 5 ஆம் தேதி காலை 7.00 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை நடைபெறும் இந்த விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
ஸ்ரீ அகத்தியர் பெருமானை போற்றி புகழும் ஆதாரனை பாடல்களை அவரின் சீடர்கள் பாடி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்துவார்கள்.
சிறப்பு பூசைகளுக்கு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்படும் என்று ஏற்பாட்டுக் குழு தலைவர் எஸ் பக்தவச்சலம் தெரிவித்தார்.
ஓலை சுவடியில் அகத்தியர் பெருமானின் உத்தரவுக்கு இணங்க ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் அகத்தியர் சித்தர் குருபூஜை விழா நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மே 5 ஆம் தேதி நடைபெறும் ஸ்ரீ அகத்தியர் சித்தர் குருபூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அகத்தியரின் அருள் கிட்டும் என்று எஸ். பக்தவச்சலம் தெரிவித்தார்.
நோய்களை தீர்க்கும் சக்தி வாய்ந்த ஸ்ரீ அகத்தியர் பெருமானின் அருள் பெற பக்தர்கள் திரளாக கலந்து கொள்ளும்படி பக்தவத்சலம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அகத்தியரை வழிபடுவோர் அவரின் அருளால் கருமங்கள் நீங்கி வாழ்வை செம்மையாக்கி வழி பிறக்கும் என்று பக்தவச்சலம் குறிப்பிட்டார்.
மேல் விபரங்களுக்கு
எஸ். பக்தவச்சலம்
012-6290305
ஸ்டார் மணியம்
011-23131781

