பாங்கி மகா சித்தி விநாயகர் ஆலயத்தின் 24 ஆம் ஆண்டு வருட அபிஷேகத் திருவிழா

காஜாங் பாங்கி குடியிருப்பில் அருள் பலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ மகா சித்தி விநாயகர் ஆலயத்தின் 24 ஆம் ஆண்டு வருட அபிஷேகத் திருவிழா மே 1 ஆம் தேதி மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது.

ஏப்ரல் 21 ஆம் தேதி கொடி ஏற்று விழாவுக்குப் பின்னர் தொடர்ந்து 11 நாள் உபயங்கள் நடைபெற்றன.

மே 1 ஆம் தேதி ஆலய திருவிழாவை முன்னிட்டு காலையில் பக்தர்கள் பால் குடங்கள் ஏந்தி காணிக்கை செலுத்துவார்கள்.

பிற்பகல் 12 மணிக்கு மேல் மகேஸ்வர பூஜை நடைபெறும் . அதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

டத்தோ சா. செல்வம் டத்தின் லோகேஸ்வரி குடும்பத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
அன்றிரவு இரத ஊர்வலமும் நடைபெறும்.

ஆலய திருவிழாவில் பாங்கி சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து விநாயகர் பெருமானின் அருளை பெற்று செல்லுமாறு ஆலய தலைவர் நடராஜன் கேட்டுக்கொள்கிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles