பேராக் இந்தியர் பூப்பந்து சங்கத்தின் 44 ஆம் ஆண்டு பூப்பந்து போட்டி.

பேராக் மாநில இந்தியர் பூப்பந்துச் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று தொடங்கி மே 1 ஆம் தேதி வரை பூப்பந்து போட்டி மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.

இந்த போட்டியை கடந்த 44 ஆண்டுகளாக இந்த சங்கம் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது.

இம்முறை மெங்களம்பு கே.பி. அகடாமி
பேட்மிண்டன் அரங்கில் போட்டி நடைபெற்று வருவதாக சங்கத் தலைவரும், ஏற்பாட்டுக்குழு தலைவருமான என்.லோகநாதன் தெரிவித்தார்.

இம்முறை 668 விளையாட்டாளர்கள் 22 பிரிவில் விளையாடுகிறார்கள்.

10 வயதிற்குட்டபட்டவர்கள் பிரிவில் 8 வயது மாணவியும் சூப்பர் சீனியர் பிரிவில் 75 வயது ஆடவரும் களம் இறங்கி உள்ளனர்.

இந்நாட்டில் இந்திய பூப்பந்து விளையாட்டாளர்கள் அனைத்துலக ரீதியிலும் மிளிர வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில ஒவ்வொரு ஆண்டும் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

ஆகவே, இப்போட்டிக்கு இந்திய சமூகத்தினர் வற்றாத ஆதரவு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles