பரதன் கிண்ணக் கால்பந்து போட்டி தொடக்க ஆட்டங்களில் கோலாலம்பூர் – சிலாங்கூர் அபார வெற்றி

கோலாலம்பூர் ஏப்ரல் 30-
மலேசிய இந்திய விளையாட்டு பேரவை ஏற்பாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பரதன் கிண்ணக் கால்பந்து போட்டியில் தொடங்க ஆட்டங்களில் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் குழுக்கள் அபார வெற்றியைப் பெற்றுள்ளன.

சிப்பாங் பண்டார் பாரு சாலாக் திங்கி அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் கோலாலம்பூர் 3-0 என்ற கோல் கணக்கில் புத்ரா ஜெயாவை வீழ்த்தியது.

கோலாலம்பூர் குழுவின் இளம் ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடினர் என்று குழு நிர்வாகி பத்துமலை தெரிவித்தார்.

கிளானா ஜெயா அரங்கில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் சிலாங்கூர் குழு 5-2 என்ற கோல் கணக்கில் போலீஸ் குழுவை வீழ்த்தியது.

மலாக்கா ஹாங் துவா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மலாக்கா 1-1 என்ற கோல் கணக்கில் நெகிரி செம்பிலானுடன் டிரா கண்டது.

டாருல் அமான் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் கெடா குழு 1-1 என்ற கோல் கணக்கில் பெர்லிஸ் குழுவுடன்  சமநிலை கண்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles