மலேசியா – இந்தியா உறவை மேம்படுத்தும் வகையில் மருத்துவ வல்லுநர்கள் , தொழில் முனைவர் களுக்கு மாயன் விருதுகள் வழங்கப்படுவது பாராட்டுக்குரியது! மனிதவள அமைச்சர் சிவகுமார் பெருமிதம்

கோலாலம்பூர் ஏப்ரல் 30-
கடந்த பத்து ஆண்டுகளாக மருத்துவ வல்லுநர்கள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மாயன் விருதுகள் வழங்கப்படுவது பெரிதும் பாராட்டுக்குரியது என்று மனிதவள வ. சிவகுமார் தெரிவித்தார்.

Ficcim எனப்படும் இந்திய வர்த்தகம் தொழில் துறை மலேசிய கூட்டமைப்பு ஆதரவில் இந்தியாவின் மாயன் விஸ்தா நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்று பத்து பேருக்கு மாயன் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் மற்றும் மலேசியாவுக்கான இந்திய தூதர் P.N. Reddy ஆகியோர் தலைமையில் விருதுகள் வழங்கப்பட்டன.

மலேசியா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே உறவை மேம்படுத்தும் நோக்கத்துடன் இத்தகைய விருது முயற்சிகளை பெரிதும் வரவேற்பதாக சிவகுமார் தெரிவித்தார்.

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மலேசியா கூட்டமைப்பு (FICCIM) மலேசியாவில் உள்ள இந்திய வணிகங்களைப் பிரதிநிதித்துவப்
படுத்தும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும்.

இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதிலும், மலேசியாவில் இந்திய வணிகங்களின் வளர்ச்சியை ஆதரிக்கும் கொள்கைகளுக்கு இந்த அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.

உற்பத்தி, வர்த்தகம், சேவைகள் மற்றும் நிதி உள்ளிட்ட பல்வேறு வகையான தொழில்களை பிரதிநிதித்துவப் படுத்தும் பல்வேறு வணிகங்களின் உறுப்பினர் தளத்தை இந்த ficcim அமைப்பு கொண்டுள்ளது.

தொழில்முனைவோர் வணிகங்களை உருவாக்குகிறார்கள் இதன் மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மக்களுக்கு வேலை கிடைக்கிறது என்று அவர் சொன்னார்.

மருத்துவ வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஆகிய இந்த இரண்டு சிறப்பு வாய்ந்த துறைகளைச் சேர்ந்த நிபுணர்களின் சேவைகளை அங்கீகரித்ததற்காக மாயன் விருதுகளை நான் பாராட்ட விரும்புகிறேன்.

இந்த அங்கீகாரத்தின் மூலம், அவர்கள் தங்கள் அயராத சேவைகளை தொடர மேலும் ஊக்குவிக்கப் படுகிறார்கள் என்று அவர் சொன்னார்.

2023 ஆம் ஆண்டு மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவை நிறுவி 66 ஆண்டுகள் நிறைவடைகிறது.

மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே வலுவான அரசியல், பொருளாதார மற்றும் சமூக கலாச்சார உறவுகள் உள்ளன.

தனிநபர் மட்டத்தில், கிட்டத்தட்ட 2.75 மில்லியன் PIO -க்கள் மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய PIO மக்கள் தொகை கொண்ட நாடு மலேசியாவாகும்..

ஆகவே,0இரு நாடுகளுக்கும் அதிக நன்மதிப்பைக் கொண்டுள்ளது என்று அவர் பாராட்டினார்.

இந்த விழாவில் Datuk Sahadevan, NLFC, Dato Paruvathy @ Athy, Athy Group , Mr. Pasupathi, Myskill Foundation, Dr Sakthiveloo, Sentosa Specialist Medical Centre, Dr Baskaran, Brighway Holdings, Dr Puraviappan, Past Arunamary Hospital, Dato Praba, Basis Bay ஆகிய ஏழு மலேசியர்களுக்கு மாயன் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ficcim தலைவர் டத்தோ தமிழ்ச் செல்வம், டத்தோ கோகிலன் பிள்ளை, ficcim செயலாளர் சுரேஸ் குமார் குரோஸ்யா, NORIAH JAAFAR, DEPUTY DIRECTOR, INTERNATIONAL PROMOTION DIVISION, ASIA & AFRICA,
DR ANANDI P G
ADVISORY BOARD MEMBER, HEALTH AND FASHION MAGAZINE
DR KARTHIK NARAYAN
EXECUTIVE EDITOR, HEALTH AND FASHION MAGAZINE ஆகியோர் இந்த விழாவில் கலந்து சிறப்பித்தனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles