உழைக்கும் தொழிலாளர்கள் நாட்டின் சொத்துக்கள் ! தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்…. மனிதவள அமைச்சர் சிவகுமார் பரிந்துரை

கோலாலம்பூர் மே1-
மலேசியாவில் தொழிலாளர்கள் அங்கீகரிக்கப்
பட்டுள்ளனர்.

திறமையும் உறுதியும் கொண்ட ஒரு பணியாளராக
பல்வேறு துறைகளில் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அதை மறுக்க முடியாது

உழைக்கும் தொழிலாளர்களும் ஒரு நாட்டின் சொத்து என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.

நாட்டின் உருவாக்கம்
முன்னேற்றம் என்பது தொழிலாளர்களின் கைவினை மற்றும் வியர்வையின் உழைப்பாகும்.

தொழிலாளர் தினம் நமது நாட்டில் உள்ள தொழிலாளர்களைப் பாராட்டி அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்க வேண்டும்.

இன்று ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தும் நாளாகும்.
ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் மத்தியில்.
நம்மால் நன்றாக வேலை செய்ய முடிந்தால், மலேசியா நிச்சயம் சிறந்த மற்றும் வளமான நாடாக திகழும் என்று அவர் சொன்னார்.

நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கை ஆற்றும் தொழிலாளர்கள் வர்க்கத்தின் நலனுக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசு தொடர்ந்து முன்னுரிமை வழங்கும் என்று
எம்டியூசி எனப்படும் மலேசிய தொழிற்சங்க சம்மேளனத்தின் மே தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போது மனிதவள அமைச்சர் சிவகுமார் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் வளர்ச்சிக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான எம்டியூசி தொடர்ந்து போராடி வருவது பாராட்டுக்குரியது..

அப்படிப்பட்ட தொழிற்சங்க சம்மேளனத்தை முதலாளிமார்கள் தரப்பில் இருந்து உரிய அங்கீகாரம் கிடைப்பது இல்லை.

அதன் அடிப்படையில் தொழிற்சங்கங்களை அங்கீகரிக்கும் வகையில் தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்.

இதன் மூலம் தொழிலாளர்களின் நலனும் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்று அவர் சொன்னார்.

மேலும் தொழிலாளர்களின் நலன் காக்கும் திட்டங்களில் ஒற்றுமை அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

குறிப்பாக வாழ்க்கை தரத்திற்கு ஏற்ற ஊதியம், தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம், வேலைக்கான உத்தரவாதம், பாதுகாப்பு திட்டங்கள், அந்நியத் தொழிலாளர்களின் பாதுகாப்பு உட்பட பல திட்டங்களை அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.

அதே வேளையில் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண்பதற்கு அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது
என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles