


கோலாலம்பூர், மே 1-
20230 ஆம் ஆண்டு தொழிலாளர் தின கொண்டாட்டம் இன்று புத்ரா ஜெயா சர்வதேச மாநாட்டு மையத்தில் (international convension centre) மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
மனித வள அமைச்சர் வ சிவகுமார் மற்றும் மனித வள அமைச்சு ஏற்பாடு செய்த இந்த தொழிலாளர் தின விழாவில் 2,500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.
தொழிலாளர் தின கொண்டாட்டத்தை ஒற்றுமை அரசாங்கம் நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் இவ்வாண்டு தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது பெரும் முத்தாய்ப்பாக அமைந்தது.
தொழிலாளர்களின் மீது நாட்டின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அக்கறை மற்றும் அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாக அவரின் வருகை அமைந்தது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்..
வரும் .2030க்குள் தொழில் திறன் வாய்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 35 சதவீதமாக உயரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நாட்டின் வளர்ச்சிக்கு தொழிலாளர்கள் வர்க்கத்தினர் மிகப்பெரிய துணையாக உள்ளனர்.
அப்படிப்பட்ட தொழிலாளர்களை கொண்டாடும் தினமாக தான் இந்த மே 1 விளங்குகிறது.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தொழிலாளர் தின விழா மிகவும் விமரிசையாக நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
குறிப்பாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டது
அனைத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய அங்கீகாரமாக நான் கருதுகிறேன் என்று அவர் சொன்னார்.
துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் உட்பட பல அமைச்சர்களும் இந்த விழாவில் கலந்து சிறப்பித்தனர்.

