குறைந்த பட்ச சம்பளத் திட்டம் தொடர்பில் வழிவகைகள் ஆராய்ந்து வருகிறோம்! மனிதவள அமைச்சர் சிவகுமார் கூறுகிறார்

புத்ரா ஜெயா மே 2
நாட்டில் குறைந்தபட்ச சம்பளத் திட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசு வழிவகைகளை ஆராய்ந்து வருகிறது என்று மனிதவள அமைச்சர் வி. சிவக்குமார் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது 1,500 வெள்ளி குறைந்தபட்ச சம்பளமாக உள்ளது. ஆனால் இந்த சம்பள முறை பெரும்பாலான தொழிலாளர்களுக்கு பெரும் சிரமமாக இருந்து உள்ளது.

தொழிலாளர்கள் தங்களது வாழ்க்கை செலவினத்தை இந்த சம்பளத்தை ஈடு கட்ட முடியாத நிலையில் உள்ளனர்.

இதனை கவனத்தில் கொண்டு புதிய குறைந்தபட்ச சம்பளம் திட்டத்தை ஆராய்ந்து, அதனைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மும்முரமாக ஆராய்ந்து வருகிறது என்று அவர் சொன்னார்.

.விரைவில் நடைபெறவிருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் இந்த சம்பள திட்டம் குறித்து நான் சில பரிந்துரைகளை முன் வைப்பேன் நேற்று என்று புத்ராஜெயாவில் நடைபெற்ற தொழிலாளர் தின கொண்டாட்டத்திற்கு பின் மனித வள அமைச்சர் சிவகுமார் நிருபர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

தொழிலாளர்கள் உரிமைக்காக போராடும் தொழிற்சங்கங்களுக்கு உரிய அங்கீகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.
இதனை அடிப்படையாகக் கொண்டு தொழிலாளர்கள் சட்டங்களிலும் திருத்தங்களை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.

இந்நாட்டில் . தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்ந்து பாதுகாக்கப்படும்.

அதேவேளையில் ஈபிஎஃப் சந்தாவை 20 சதவீதமாக உயர்த்தும் நடவடிக்கைகளையும் அரசு ஆராய்ந்து வருகிறது என்று அவர் சொன்னார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நேற்று நடைபெற்ற தொழிலாளர் தின கொண்டாட்டத்தில் 2,500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles