GLC நிறுவனங்களுடனான வேலையிட பாதுகாப்பு – சுகாதார உச்சநிலை மாநாட்டை மனிதவள அமைச்சர் சிவகுமார் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்

பாங்கி மே 9-
நாட்டில் முதல் முறையாக 24 ஜிஎல்சி நிறுவனங்களுடன் இணைந்து லேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார உச்சநிலை மாநாட்டை தெனாகா நேசனல் பெர்ஹாட் இன்று ஏற்று நடத்தியது.

பண்டார் பாரு பாங்கி hotel tenera வில் இன்று நடைபெற்ற இந்த உச்சநிலை மாநாட்டை மனிதவள அமைச்சர்
வ. சிவகுமார் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை (JKKP) அரசு தொடர்பான நிறுவனங்களுடன் உச்சநிலை மாநாடு என்பது தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தில் தற்போதைய பிரச்சினைகள் மற்றும் சவால்களை விவாதிக்கும் நோக்கத்தில் நடத்தப்படும் நிகழ்வாகும்.

இந்த உச்சநிலை மாநாடு, அதன் தொடக்கத்தில் இருந்தே ஊக்கமளிக்கும் வரவேற்பைப் பெற்றது.

ஒவ்வொரு ஆண்டும், தொழில் விபத்துக்கள் மற்றும் நோய்களில் ஈடுபடும் தொழிலாளர்களை நினைவு கூர்வதற்கும் பாராட்டுவதற்கும் ஏப்ரல் 28 ஆம் தேதியை சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) உலக OSH தினமாக அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு, கொண்டாட்டத்தின் கருப்பொருள் “வேலைச் சூழல் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான வேலை சூழல் என்பதாகும் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணி கலாச்சாரத்தை கடைப்பிடிப்பதன் விளைவாக குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கண்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில், மலேசியா முழுவதும் மொத்தம் 21,534 வேலையில் விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளது..

அவற்றில் 301 மரண சம்பவங்கள் ஆகும். தற்போது இந்த எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

உலக தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார தினம் 2023 நடவடிக்கைகளில் ஒன்றான GLC OSH உச்சநிலை மாநாடு அமைந்துள்ளது என்றார் அவர்.

இந்த திட்டம் GLC உள்ளிட்ட தொழில் துறையினரை ஊக்குவிப்பதற்காக அந்தந்த நிறுவனங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்ட சிறந்த PPE நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ள உருவாக்கப்பட்டதாகும்.

அனைத்து GLCக்களும் ஒன்றிணைந்து இந்தப் போட்டியை வெற்றியடையச் செய்யுமாறு அழைப்பு விடுக்கிறேன் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles