


பாங்கி மே 9-
கடந்த ஆறு தசாப்தங்களாக நாட்டின் பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சிக்கு ஏற்ப, வளங்கள், திறமைகள், திறன்கள் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றைப் பயன்படுத்தி நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தையும் மக்களின் வருமான அளவை அதிகரிப்பதிலும் மலேசியா வெற்றி பெற்றுள்ளது என்று மனிதவள அமைச்சர்
வ. சிவகுமார் தெரிவித்தார்.
ஆசிய பிராந்தியத்தில் மலேசியா ஒரு ஆற்றல்மிக்க தொழில் பொருளாதார நாடாக உருவெடுக்கும் வகையில், முயற்சிகள் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
12ஆவது மலேசிய திட்டம் காலம் முழுவதும் நாட்டின் பொருளாதாரத்தை உண்மையான சாத்தியமான வளர்ச்சியின் பாதையில் கொண்டு சென்றுள்ளது.
பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணி கலாச்சாரத்தை கடைப்பிடிப்பதன் விளைவாக குறிப்பிடத்தக்க மாற்றங்களை நாடு கண்டுள்ளது என்று அவர் சொன்னார்.
இன்று பண்டார் பாரு பாங்கியில் 24 ஜிஎல்சி நிறுவனங்களுடன் இணைந்து தெனாகா நேசனல் ஏற்பாட்டில் நடைபெற்ற வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார உச்சநிலை மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

