


கோலாலம்பூர் மே 10-
கம்போடியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சீ விளையாட்டு போட்டியில் மலேசிய திருநாட்டிற்கு பதக்கங்களை வாரி குவித்து கொண்டிருக்கும் மலேசிய விளையாட்டாய் களுக்கு மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் தமது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
பல நாடுகளில் இருந்து விளையாட்டாளர்கள் கலந்து கொண்ட போதிலும் மலேசிய விளையாட்டாளர்கள் வீர போராட்டம் நடத்தி பதக்கம் வென்று வருவது மிகவும் பாராட்டுக்குரியது.
கராத்தே போட்டியில் 4 தங்கம் , 2 வெள்ளி, 4 வெண்கலம் வென்று மலேசிய கராத்தே விளையாட்டாளர்கள் சாதனை படைத்திருக்கிறார்கள்.
அதேபோல் 400 மீட்டர் ஓட்டத்தில் 24 ஆண்டுகளுக்கு பிறகு இளம் வீராங்கனை ஷெரின் வெல்லாபோய் தங்கம் வென்றுள்ளார்.
அதேபோல் 400 மீட்டர் ஓட்டத்தில் மலேசியாவின் இளம் வீரர் ஓமார் புதிய தேசிய சாதனையுடன் தங்கம் வென்றுள்ளார்.
சுத்தியல் எறியும் போட்டியில் மலேசிய வீராங்கனை கிரேஸ் வோங் மீண்டும் தங்கம் வென்றுள்ளார்.
இது தவிர்த்து பல போட்டிகளில் மலேசிய விளையாட்டாளர்கள் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்..
இன்னும் பல போட்டிகளில் மலேசிய விளையாட்டாளர்கள் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமையை சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என்று அவர் சொன்னார்.

