

மலாக்கா,
இந்திய சமுதாயத்தின் வாழ்வியல் மேம்பாட்டிற்கு வித்திடும் வகையில் மலாக்கா கனரக ஓட்டுனர் கூட்டுறவு கழகம் மலாக்கா வரலாற்று மண்ணில் உதயமாகி உள்ளது வரவேற்கதக்கது.
இதன் வழி ஓட்டுனர்களாக வேலைச் செய்பவர்கள் வருங்காலத்தில் சொந்த கனரக வாகனங்களை வாங்கும் முதலாளியாக உருவாகும் வாய்ப்பு உள்ளது என மலேசிய தொழில் முனைவர்-கூட்டுறவு மேம்பாட்டு துணையமைச்சர் சரவஸ்தி கந்தசாமி கூறினார்.
டுரியான் துங்கால் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற மலாக்கா கனரக வாகன ஓட்டுனர்களின் அமைப்புக் கூட்டத்தை அதிகாரபூர்வமாக திறந்த வைத்தப் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கனரக ஓட்டுனர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் எனும் தனது நீண்ட நாள் கனவு இப்பொழுதுதான் நிறைவேறி உள்ளது என்றார்.
சமுதாயத்திற்கு நன்மைபயக்கச் செயலைச் செய்ய வேண்டும் எனும் வேட்கை மலாக்கா மாநில முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினரும் முன்னாள் காடேக் சட்ட மன்ற உறுப்பினருமான ஜி. சாமிநாதன் முயற்ச்சியில் மிக விரைவாக அரங்கேற்றம் கண்டுள்ளதை கண்டு தான் மனம் குளிர்வதாக கூறினார்,
பொதுவாக கனரக வாகம் ஓட்டுனர்கள் குறைந்த வருமானம் பெறும் நடுத்தர வாழ்வியலை கொண்டவர்களாக திகழ்கின்றனர்.
அதிகமான இந்தியர்கள் இத்தொழிலில் கால் பதித்து வருகிறனர்
இவர்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி அவர்களும் சொந்தமாக லோரிகள், கனரக வாகனங்கள் அதன் உபரிப்பாகங்கள் விற்பனை செய்யும் தொழிலை மேற்கொள்வதற்கு இக்கூட்டுறவு கழகம் சிறந்தோரு உறவு பாலமாக திகழும் என்றார்
கூட்டுறவு கழகத்தில் உறுப்பியம் பெரும் அங்கதினர்களுக்கு சுகாதாரப் பரிசோதனை, காப்புறுதி , பிள்ளைகளுக்கு உயர் கல்வி ஊக்குவிப்பு சலுகைகளை வழங்க உள்ளது.
உறுப்பினர்களுக்கு பல்வேறு தரமான செயல் திட்டங்களை வழங்கி சிறப்பாக சமுதாய நலன் காக்கும் அமைப்பாக செயலாற்ற உள்ளது. இதற்கு அங்கத்தினர்களின் தரமான செயல் நடவடிக்கை மிக அவசியம் என்றார்.
நிகழ்வில் வரவேற்பு உரையாற்றிய மலாக்கா கூட்டுறவு கழகத்தின் தலைவர் ஜி. சாமிநாதன் மலேசிய அரசியல் வானில் முத்திரைப் பதிக்கும் வண்ணம் தனித்து ஒரு இந்திய பெண்ணாக இருந்து சமுதாயத்திற்கு தான் பதவி வகிக்கும் காலத்தில் ஏதாவது செய்ய வேண்டும் எனும் உயரிய லட்சியத்தைக் கொண்டிருக்கும் துணை அமைச்சர் சரஸ்வதிக்கு தனது வாழ்த்துக்களை நன்றியையும் முன்னாள் காடேக் சட்ட மன்ற உறுப்பினரான அவர் கூறினார்.
இந்நிகழ்வில் சிரம்பான் ஜெயா சட்ட மன்ற உறுப்பினர் குணசேகரன் , மலாக்கா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அலேக்ஸ் சியா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

