சீனா ஆசியப் போட்டியிலும் மலேசிய கராத்தே குழு தங்கத்தை வெல்ல வேண்டும்! மனிதவள அமைச்சர் சிவகுமார் வேண்டுகோள்

புத்ரா ஜெயா மே 17-
வரும் அக்டோபர் மாதத்தில் சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசிய கராத்தே குழு தங்கப் பதக்கம் வெல்ல போராட வேண்டும் என்று மனிதவள அமைச்சர்
வ.சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒவ்வொரு சீ மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசிய கராத்தே குழு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில் சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் உலக வீரர்களுக்கு ஈடுகொடுத்து மலேசிய கராத்தே குழு தங்கம் வென்று நாட்டிற்கு பெருமையை தேடித் தர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

கம்போடியா சீ விளையாட்டு போட்டியில் 4 தங்கம் 2 வெள்ளி 4 வெண்கலம் வென்று சாதனை படைத்த மலேசிய கராத்தே விளையாட்டாளர்கள் இன்று மனிதவள அமைச்சர் சிவகுமாரை சந்தித்து வாழ்த்துகளை பெற்றனர்.

அப்போது கராத்தே விளையாட்டாளர்
களுடன் உரையாடிய மகிழ்ந்த மனிதவள அமைச்சர் சிவகுமார், கராத்தே விளையாட்டாளர்களின் போராட்டத்தை பெரிதும் பாராட்டி மகிழ்ந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles