


புத்ரா ஜெயா மே 18-
மனித வள அமைச்சின் ஏற்பாட்டில் மக்கள் குறைகளை கேட்டறியும் சந்திப்பு நிகழ்வு இன்று IOI City Mall Putrajaya பேராங்காடியில நடைபெற்றது.
இந்த சந்திப்பில் பொதுமக்கள் பெரும் அளவில் கலந்து கொண்டு தங்களது பிரச்சனைகளை மனித வள அமைச்சர் வ. சிவகுமாரிடம் முன் வைத்தனர்.
பிறப்பு பத்திரம், குடியுரிமை, வழிபாட்டு தலங்களுக்கு மானியம், சிறுதொழில் தொடங்க நிதியுதவி,சொக்சோ சமூக நல நிதியுதவி, வசதி குறைந்த தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி, முன்னாள் தமிழ்ப்பள்ளி ஆசியர்கள் சங்கத்திற்கு நிதியுதவி உட்பட பல பிரச்சனைகளை மக்கள் முன் வைத்தனர்.
மக்கள் குறைகளை மிகவும் உன்னிப்பாக கேட்டறிந்த மனிதவள அமைச்சர் சிவகுமார் படிப்படியாக தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

