


கோலாலம்பூர், மே 19-
The beauty industry எனப்படும் அழகு தொழில் துறை மலேசியாவின் பொருளாதாரத்திற்கு இன்றியமையாத அங்கமாகும் என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார்.
தற்போது அழகு துறை
உலகளவில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது RM 450 பில்லியனுக்கு மேல் ஈட்டுகிறது.
தென்கிழக்கு ஆசியாவில் மட்டும் இது 10.98% அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய பயனீட்டாளர்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்துவதன் வழி
வாழ்க்கை முறைகள், தனிப்பட்ட ஆரோக்கியம், சீர்ப்படுத்தல் மற்றும் பொது
நல்வாழ்வில் இந்த அழகு தொழில் துறை முக்கியத்துவம் பெறும் வாய்ப்பு உள்ளது.
அழகு தொழில் துறையில் 80,000 வல்லுநர்கள் உள்ளனர்.
வரவிருக்கும் காலத்திலும் தொடர்ந்து மேம்பாடு காணும் என்று நம்புகிறேன்.
அழகு சாதனங்களில் தொழில்நுட்ப முன்னேற்றம்
வியக்க வைக்கிறது.
உடல் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும்
ஒளிரும் அழகு துறை பெரிதும் உதவுகிறது.
அழகு தொழில் துறையில் வெற்றி நடைபோடும் One Doc Group நிறுவனத்தை பாராட்டுகிறேன்.
அங்கீகாரம் பெற்ற அவர்களின் பயிற்சித் திட்டத்தின் தொடக்கம் திறன் மேம்பாட்டுத் துறை (Department of Skill Development) மற்றும்
மனிதவள அமைச்சுடன் (Ministry of
Human Resourc ) தொடங்கப்பட்டதாகும்.
தோல் பராமரிப்பில் சமீபத்திய தொழில்நுட்பம் ONE DOC – PICO 250 ஐ
உலகத் தரத்திற்கு கொண்டு வருவதில் அவர்களின் உன்னத முயற்சிகளை பெரிதும் பாராட்டுகிறேன்.
அழகு துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் One Doc நிறுவனத்தின் அனைத்து நிபுணர்களை யும் பாராட்டுகிறேன்.
One Doc group நிறுவனத்தின் இரட்டை அழகு தொழில் பாடத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தபோது மனிதவள அமைச்சர் சிவகுமார் இவ்வாறு தெரிவித்தார்.

