
புந்தோங் இந்தியர் மனமகிழ் மன்றத்தின்( ஐ ஆர் சி) வளாகத்தில் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கர்ம வீரர் காமராஜரின் சிலை திறப்பு விழா செய்யப்படவுள்ளது.
நாளை 21.5.2023( ஞாயிற்றுக்கிழமை) காலை மணி 9.00 க்கு திறப்பு விழா இடம் பெறும் என்று ஏற்பாட்டுக்குழு தலைவரும், ஐ ஆர் சி கிளப்பின் உதவித்தலைவர் ந. சாகர் கூறினார்.
இந்த வரலாற்றுப்பூர்வ நிகழ்வு முன்னாள் மனித வள அமைச்சரும், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.குலசேகரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
ஆகையால், சுற்று வட்டார மக்கள் இந்நிகழ்வில் கலந்துக்கொள்ள அழைக்கப்படுவதாக அவர் கூறினார்.
இந்நிகழ்வில் முத்தாய்ப்பு அங்கமாக கர்ம வீரர் காமராஜர் பற்றி டாக்டர் காதர் இப்ராஹிம் விரிவான விளக்கமளிப்பார்.
ஓம்ஸ் தியாகராஜன் தமதுரையை பதிவு செய்வார் என்று அவர் சொன்னார்.

