வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை குறைப்பதில் வெற்றி. 793,086 பேர் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர்! மனிதவள அமைச்சர் சிவகுமார் பெருமிதம்

புத்ரா ஜெயா, மே 20-
2023 முதல் காலாண்டில் நாட்டில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

குறிப்பாக வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை குறைப்பதில் மனிதவள அமைச்சின் அர்ப்பணிப்பு வெற்றிகரமாக உள்ளது என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் இன்று தெரிவித்தார்.

2023 முதல் காலாண்டில், புத்ராஜெயா மிக குறைவான விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. புத்ரா ஜெயாவில் வேலையில்லா திண்டாட்டம் 0.8 சதவிகிதம் குறைவாக உள்ளது.

அதைத் தொடர்ந்து பெர்லிஸ் 2.1% , பினாங்கு 2.3% மற்றும் நெகிரி செம்பிலான் 2.5% பதிவு செய்துள்ளது. இப்போது தேசிய பொருளாதாரம் வலுவாக உள்ளதோடு 5.6 விழுக்காடு பதிவு செய்துள்ளது.

பல்வேறு அமைச்சுகளுடன் மனிதவள அமைச்சு மேற்கொண்ட ஒத்துழைப்பு காரணமாக வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை குறைப்பதில் இந்த வெற்றிக்குக் காரணம் என்று அவர் சொன்னார்.

Perkeso, Talentcorp, HRD Corp மற்றும் மேம்பாட்டுத் துறை மூலம் ஏஜென்சிகளுடன் இணைந்து மனிதவள அமைச்சு வேலை தேடுபவர்களுக்கு உதவ MyFutureJobs வேலை போர்ட்டலை வழங்குகிறது.

தகுதிகள், திறன்கள், அனுபவம் மற்றும் சம்பளம் அடிப்படையில் முதலாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வரை நாட்டில் மொத்தம் 793,086 பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்றார் அவர்.

வேலை தேடுபவர்களுக்கும் முதலாளிகளின் வேலை வாய்ப்பை உயர்த்துவதில் தனது Perkeso அலுவலகங்களிலும் நேர்காணல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தினசரி மற்றும் வாராந்திர அடிப்படையில் குறிப்பிட்ட நாட்களில் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்பு திருவிழாவையும் Perkeso நடத்துகிறது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles