

உலகின் மிக உயரமான வாகன போக்குவரத்து சாலையான லடாக்கை நோக்கி எட்டு மலேசிய இளைஞர்கள் சாதனை பயணத்தை மேற்கொண்டனர் .
கடுமையான குளிருடன் பணி சூழ்ந்த அந்த சாலையில் பயணிப்பது ஒவ்வொரு மோட்டார் சைக்கிள் ஓட்டிக்கும் மிகவும் சவாலான ஒன்று என்றுதான் கூற வேண்டும்.
பல சவால்களைத் தாண்டி சாதனைகள் படைக்க துடிக்கும் மசில் ரைடர் குழுவினரான ரஞ்சித், காளி, விஜய் ,சிவா, ஆனந்த், வேணு, குமார், நெல்சன், ஆகியோர் இம்மாதம் 17ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் ஐந்தாம் தேதி வரை இந்த சவால் மிக்க பயணத்தை மேற்கொள்கின்றனர்
.18,380 அடி உயரத்தைக் கொண்ட பணி சூழ்ந்த மலைப் பகுதியை கடும் குளிர் காலகட்டத்தில் மோட்டார் சைக்கிள்கள் வழி தொடர்வது என்பது போராட்டமான சூழ்நிலை என விஜய் விவரித்தார்.
டில்லியில் இருந்து சண்டிகார் வாயிலாக பட்னி தோப் அடைந்து பின்னர் அங்கிருந்து காஷ்மீர் ஸ்ரீநகருக்கு சென்று மீண்டும் டில்லியை சென்றடைவோம் என விஜய் விளக்கினார் .
எந்த ஒரு பாதுகாப்பும் உதவியும் இன்றி சொந்த முயற்சியில் இந்த பயணத்தை மேற்கொள்வதாகவும் தங்களாலும் மலேசிய கொடியை இந்த துணிகர செயலால் உச்சத்தில் பறக்க விட முடியும் என்ற தன்னம்பிக்கையில் செல்வதாக அந்த எட்டு வீரர்களும் குறிப்பிட்டனர்.

