
அடுத்த மாதம் ஜூன் 16-ம் நாள் துன் சம்பந்தனாரின் பிறந்தநாள்.
கடந்த ஆண்டு இங்கு அவரது பிறந்தநாள் துன் அவர்களின் மகளுடன் மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.
நீங்கா இடம் பெற்ற அவர் பெயரில் இயங்கி வரும் இத்தமிழ்ப்பள்ளி சுபாங் ஜெயா இவ்வட்டாரத்தில் சிறப்பு வாய்ந்த பள்ளியாக பெருமை பல சேர்த்து வருகின்றது.
இவ்வட்டாரத்தில் பல சிறப்பு அம்சங்களைத் தாங்கி மலேசியாவில் இயங்கி வரும் மூவினமும் ஒன்றினைந்த ஒரே வாவாசான் தமிழ்ப்பள்ளியாகவும் இப்பள்ளி இயங்கி வருகின்றது.
இன்று இப்பள்ளிக்கு செனட்டர் டத்தோ நெல்சன் மற்றும் ம.இ.கா உச்ச மன்ற உறுப்பினர் திருமிகு. சிவசுப்ரமணியம் அவர்களும் வருகை புரிந்தனர்.
இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் இங்கு புதிய இணை கட்டடம் விரைவில் எழுப்பிடவும் வேலைகள் நடந்து வருகின்றன.
உடனடியாக மாணவர்களுக்கு 200 நாற்காலி மேசைகள் கிடைத்திட விரைவில் ஏற்பாடு செய்வதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் இப்பள்ளி கணினி அறை மறுசீரமைப்பு செய்யப்படவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனர். இவ்வட்டாரத்தில் இப்பள்ளியில் மட்டும் முதல் ட்ரோன் கிளப் இருப்பது பெருமை கொள்ளும் விசயமாகவும் கருதப்படுகின்றது.
அதே போல் இப்பள்ளி ஓரிடத்தில் பல்முனை வசதிகள் என்ற ரீதியில் கராத்தே, தேகுவாண்டோ, சிலம்பம், சதுரங்கம், இளம் ஆய்வாளர் குழுமம், கலைக்கல்வி, பரதம், காற்பந்து, பூப்பந்து, கூடைப்பந்து என பல்வேறு புறப்பாட நடவடிக்கைகள் சிறப்புடன் இயங்கி வருவது கண்டு பெருமிதம் கொண்டனர்.
பள்ளிக்கும் அதன் நிர்வாகத்திற்கு உறுதுணையாக இருந்து செயல்படும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கும் நல்வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்தினர். இப்பள்ளிக்குத் தம் பிள்ளைகளை நம்பிக்கையுடன் அனுப்பும் பெற்றோருக்கு முதர்கன் வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டனர்.

