


ஈப்போ, மே.21: இங்குள்ள தம்புன் ” லோஸ்ட் வேல்ட்” கேளிக்கை மையத்தில் ஹரி ராயா மடானி திறந்த இல்ல நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது. இந்நிகழ்வில், பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா தம்பதியினர், ராஜா மூடா பேராக் தம்பதியினர் மற்றும் ராஜா டி ஹீலிர் பேராக் தம்பதியினர் சிறப்பு பிரமுகர்களாக மக்களுடன் கலந்துக்கொண்டனர்.
இந்த திறந்த இல்ல உபசரிப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தம்பதியினர் மற்றும் அமைச்சர்கள் தம்பதியினர், துணையமைச்சர்களும், அரசாங்க இலாகாவின் இயக்குநர்களும் கலந்து சிறப்பித்தனர். அவர்களுடன், பக்காதத்தான் ஹாராப்பானின் தோழமை கட்சித்தலைவர்களும் கலந்துக்கொண்டனர்.
இந்த மடானி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வில் சுமார் 55 ஆயிரம் பேர் கலந்துக்கொண்டதாக நம்பப்படுகிறது. மாலை 5 மணிக்கே மக்கள் இந்த லோஸ்ட் வேல்ட் வளாகத்தில் குவிந்து வந்தனர். அவ்வேளையில் கனத்த மழை பெய்த போதும், அதனைப்பொருட்படுத்தாமல் மக்கள் வருகை அதிகரித்து வந்தன.
மாலை மணி 7.00 முதல் கலை பண்பாட்டு விழா துவங்கியபோது மக்களுக்கு பல வகையான உணவுகளும் பரிமாறப்பட்டன. அதன் பின் சுல்தான் நஸ்ரின்ஷா தம்பதியினருடன் மற்ற அரசு குடும்ப பிரமுகர்களும் வருகையளித்தனர். இந்நிகழ்வில், மலேசிய புகழ் டத்தோ ஜாமால் அப்துல்லாவின் பாடல்கள் மற்றும் அவரின் படைப்பு மக்களை பெரிதும் கவர்ந்தது. இந்நிகழ்வு இனிதே இரவு மணி 10.30க்கு முடிவுற்றது.

