189 தொழிற்சங்கங்களுக்கு 26 லட்சம்! தோட்டத் தொழிற்சங்கத்திற்கு மனிதவள அமைச்சர் சிவகுமார் 19,000 வெள்ளியை வழங்கினார்

ஈப்போ மே 22-
NUPW எனப்படும் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்திற்கு 19 ஆயிரம் வெள்ளி மானியத்தை மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் வழங்கி பேருதவி புரிந்துள்ளார்.

இரு தினங்களுக்கு முன்னர் ஈப்போ இம்பியானா ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிதி வழங்கும் நிகழ்வில் மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார் சார்பில் மலேசிய தொழிற்சங்க பதிவு இலாகாவின் தலைமை இயக்குனர் கமால் பின் பாட்லி தலைமைத் தாங்கினார்.

இந்த நிகழ்வில் 189 தொழிற்சங்கங்களுக்கு மொத்தம் 26 லட்சம் வெள்ளி மானியம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் தேசிய தோட்டத் தொழிற்சங்கத்திற்கு 19,000 வெள்ளி வழங்கப்பட்டது.

தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக சிலாங்கூர் மாநில செயலாளர் வை.தாமாசோகரன், பேராக் மாநில தலைவர் ரசாக் மற்றும் மாநில செயலாளர் மு. குணாசன் 19,000 வெள்ளி மானியத்தை நேரடியாக பெற்றுக் கொண்டனர்.

தொழிற்சங்கங்களைச் சார்ந்த கமிட்டி உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம்கள் நடத்துவதற்கு ஏதுவாக தொழில் சங்கங்களுக்கு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே 19,000 வெள்ளியை வழங்கிய மனிதவள அமைச்சர் சிவகுமாருக்கு தேசிய தோட்டத் தொழிற்சங்கம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles