

விரைவில் நடைபெற உள்ள Bukit Tambun ஸ்ரீ மகா முத்தாள்ம்மன் கோவில் திருவிழாவின் ஏற்பாட்டிற்கு விண்ணப்பிப்பதில் உள்ள நியாயமற்ற தடைகளை ரத்து செய்ய வேண்டும் என Pejabat Polis Daerah Seberang Perai Selatan மாவட்ட காவல்துறைத் தலைவரை பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் டாக்டர் பி.ராமசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
ரத ஊர்வலத்தின் போது பொதுவாக பயன்படுத்தப்படும் சில வழித்தடங்களில் செபெராங் பிறை மாவட்ட காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக டாக்டர்.இராமசாமி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ரத ஊர்வலத்தில் 40 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகளை போலீஸ் துறை மீட்டுக் கொள்ள வேண்டும்.
இல்லையென்றால் இந்தப் பிரச்சினையை மலேசியப் பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன் என்று அவர் சொன்னார்.

