


ரவாங், மே 22-
மலேசிய தெலுங்கு சங்கத்தின் ஏற்பாட்டில் கலாச்சார நிகழ்வு நேற்று முன்தினம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
ரவாங்கில் உள்ள தெலுங்கு கலாச்சார மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 2,000 பேர் கலந்து சிறப்பித்தனர்.
துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மலேசிய தெலுங்கு சங்கத்தின் தலைவர் டாக்டர் வெங்கெட் பிரதாப், துணை தலைவர் சத்தியா சுதாகரன், முன்னாள் தலைவர் டத்தோ டாக்டர் அட்சயக்குமார், தேசிய நிலநிதி கூட்டுறவு கழகத்தின் தலைமை இயக்குநர் டத்தோ ப. சகாதேவன்,மைபிபிபி கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா, மலேசியாவுக்கான இந்திய தூதரகத்தின் முதல் நிலை செயலாளர் சுஸ்மா உட்பட பல அரசு சார்பற்ற இயக்கங்களின் தலைவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
பல்வேறு கலைஞரை நிகழ்வுகளுடன் நடைபெற்ற இந்த விழாவில் துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தலைமையில் பத்து மூத்த தலைவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

