பரதன் கிண்ணக் கால்பந்து போட்டி அரையிறுதி ஆட்டத்தில் பினாங்கு – சிலாங்கூர் பலப்பரீட்சை!

மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவை ஏற்பாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பரதன் கிண்ணக் கால்பந்து போட்டியில் அரையிறுதி சுற்றில் பலம் வாய்ந்த சிலாங்கூர் குழுவுடன் பினாங்கு பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

நேற்று நடைபெற்ற யூஎஸ்எம் மினி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் பினாங்கு குழு 3-0 என்ற கோல் கணக்கில் பேராக் குழுவை வீழ்த்தியது.

முதல் பாதி ஆட்டத்தில் பினாங்கு குழு இரண்டு கோல்களை அடித்து பரபரப்பை ஏற்படுத்தியது.

கடைசி நேரத்தில் பேராக் குழு ஆட்டக்காரர் தன் குழுவுக்கே சொந்த கோலை அடித்து கொண்டார்.

இறுதியில் பினாங்கு 3-0 என்ற கோல் கணக்கில் பேராக்கை வீழ்த்தியது.

மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் சிலாங்கூர் குழு சிலாங்கூர் குழு 3-0 என்ற கோல் கணக்கில் கெடா வை வீழ்த்தியது.

அடுத்த வாரத்தில் பினாங்கு – சிலாங்கூர் மோதும் அரையிறுதி ஆட்டம் மே 28 ஆம் தேதி யூஎஸ்எம் மினி அரங்கில் நடைபெறுகிறது.

இம்முறை பினாங்கு குழு பரதன் கிண்ணத்தை வென்ற சாதனை படைக்க காத்துக் கொண்டிருக்கிறது என்று பினாங்கு இந்தியர் கால்பந்து சங்கத்தின் தலைவர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.

பினாங்கு குழுவுக்கு ஆதரவு தெரிவிக்க செபெராங் பிறை கவுன்சிலர் டேவிட் மார்ஷல் மற்றும் டத்தோ தினகரன் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles