


கோலாலம்பூர் மே 27-
PERKESO எனப்படும் சொக்சோ நிறுவனத்தின் 202 ஊழியர்களுக்கு மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் விசுவாசமான விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
கோலாலம்பூர் இண்டர் கொண்டிடேன்டல் தங்கும் விடுதியில் நேற்றிரவு நடைபெற்ற விருதளிப்பு விழாவில் சொக்சோ நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்களுக்கு விசுவாசமான சேவையாளர்கள் விருதுகள் வழங்கப்பட்டன.
சொக்சோ நிறுவனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ சுபாஹான் கமால் மற்றும் சொக்சோ நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் அஸ்மான் ஆகியோர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் இந்த விருதளிப்பு விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
சொக்சோ இயக்குநர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள்
அனைவரும் ஒரு முன்மாதிரியாகவும் உத்வேகமாகவும் இருப்பது பாராட்டுக்குரியது என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தமது உரையில் தெரிவித்தார்.
தீவிரத்தன்மை, அர்ப்பணிப்பு, ஒருங்கிணைந்த இணைப்பு,
நிர்வாகம் மற்றும் அனைத்து சொக்சோ தொழிலாளர்களின் உழைப்பு
வெற்றிக்கான அடித்தளமாகும்.
2023 எழுச்சி ஆண்டு என்ற கருப்பொருளாக கொண்டு 2020 ஆம் ஆண்டில் சிறந்த சேவையை வழங்கிய சொக்சோ ஊழியர்களுக்கு விசுவாச சேவை விருதுகள் வழங்கப்படுவது மிகவும் பாராட்டுக்குரியது.
விருது பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். இந்த அங்கீகாரம் அடுத்த வெற்றிக்கு அறிகுறியாகும் என்று பெரிதும் நம்புகிறேன்.
அனைத்து சொக்சோ ஊழியர்களும் ஊக்கம் அளிக்கும் வகையில் இன்னும் சிறப்பாக சேவையாற்றிட மனதார வாழ்த்துகிறேன்.
நீங்கள் மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் முன்மாதிரியாகவும் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

