மனித மூலதன வளர்ச்சியில் சிங்கப்பூருக்கு அடுத்தபடியாக இரண்டாவது சிறந்த ஆசியான் நாடாக மலேசிய விளங்குகிறது! மனிதவள அமைச்சர் சிவகுமார் பெருமிதம்

புத்ரா ஜெயா மே 27-
உலகப் பொருளாதாரத்தின் உலகளாவிய போட்டித்தன்மை 2019 ஆம் ஆண்டு அறிக்கையின்படி 141 நாடுகளில்
மலேசியா இருபத்தைந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இது மனித மூலதன வளர்ச்சியாகும்.

சிங்கப்பூருக்கு அடுத்தபடியாக இரண்டாவது சிறந்த ஆசியான் நாடாக மலேசிய விளங்குகிறது என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

மனித மூலதனத்தை உருவாக்குவதில் சந்தேகத்திற்கு இடமின்றி, மலேசியா சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தொழிலாளர்களின் கல்வி மற்றும் பயிற்சியின் தரத்தை மேம்படுத்துதல் இதில் அடங்கும்.

மலேசியர்களின் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துவதுடன்
தகவல் தொழில்நுட்பத் துறையில் விரைவான ஆற்றலை பெற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த விழிப்புணர்வுதான் அடையாளம் காணும் ஊக்கியாக தேசிய பயிற்சி வாரம் (NTW) 2023 முதல் முறையாக மனிதவள அமைச்சு அறிமுகப்படுத்தி உள்ளது என்றார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் அனைத்து சமூகங்களும் பங்கேற்கும் வகையில், 300 பயிற்சி திட்டங்கள் இதன் இலக்காக உள்ளது.

வருங்காலத்தில்
அதிக பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் வருடாந்திர தேசிய பயிற்சியில் பங்கேற்க முடியும்.

மனிதவள அமைச்சின் சார்பில் இந்த திட்டத்தை வெற்றியடைய செய்த HRD Corp உட்பட அனைத்து தரப்பினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இன்று Putrajaya International Convension Centre மாநாட்டு மண்டபத்தில் துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தலைமையில் நடைபெற்ற தேசிய பயிற்சி வாரம் நிகழ்வில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மனிதவள அமைச்சின் கீழ் இயக்கும் எச்ஆர்டி கோர்ப் ஏற்பாட்டில் தேசிய பயிற்சி வாரம்
மே 22அம் தேதி தொடங்கி நாளை 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

5,000 பயிற்சியாளர்களை கொண்ட இப்பயிற்சி திட்டங்கள் வாயிலாக 125,000 பேர் பயன் பெறவுள்ளனர்.

இதுவரை 21,052 பயிற்சிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 103,823 பேர் இதில் பங்கேற்றுள்ளனர். 404,312 மணி நேரம் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது

மலேசியர்கள் அனைத்து துறைகளிலும் திறன் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

அனைத்து மக்களுக்கும் பயிற்சிகள் சென்றடைய வேண்டும்.
குறிப்பாக திவேட் எனப்படும் தொழில் திறன் பயிற்சிகளின் வாயிலாக மக்கள் பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில் தான் மனிதவள அமைச்சு இந்த தேசிய பயிற்சி வாரத்தை முதல் முறையாக அறிமுகப்படுத்தியது என்று அவர் சொன்னார்.

இன்றைய விழாவில் மனிதவள அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜைனி ஊஜாங், துணை தலைமை செயலாளர் டத்தோ ஹாஜா நோரிசான் ரம்லி, HRD Corp தலைவர் டத்தோ ராஜசேகரன் ராமசாமி , HRD Corp தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ சாகுல் ஹமீது உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles