

புத்ரா ஜெயா மே 27-
பொருளாதரத்தில் ஆசியாவின் புலியாக மலேசிய மீண்டும் விளங்க வேண்டும் என்று துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்பு ஆசியாவின் புலியாக மலேசிய விளங்கியது. ஆனால் உறுதியற்ற அரசியல் நிலைத் தன்மையால் அது பாதித்தது.
ஆனால் இப்போது முதல் காலாண்டில் மலேசியாவின் பொருளாதாரம் சிறப்பாக இருக்கிறது .
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வலுவடையும் என்று அவர் சொன்னார்.
Putrajaya International Convension Centre மண்டபத்தில் இன்று மனிதவள அமைச்சின் HRD Corp ஏற்பாட்டில் தேசிய பயிற்சி வார்த்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தேசிய பயிற்சி வாரம் மூலம் மலேசியர்கள் ஏராளமான பயிற்சியை பெறுகிறார்கள்.
இந்த பயிற்சி வாரத்தை ஒவ்வொரு ஆண்டும் மனிதவள அமைச்சு நடத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மனிதவள அமைச்சர் வ சிவகுமார், மனிதவள அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜைனி ஊஜாங், துணை தலைமை செயலாளர் டத்தோ ஹாஜா நோரிசான்,HRD Corp தலைவர் டத்தோ ராஜசேகரன் ராமசாமி HRD Corp தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ சாகுல் ஹமீது உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

