1 லட்சத்து 50,000 ஏழை இல்லத்தரசிகளை பாதுகாக்க சொக்சோ சமூக நல பாதுகாப்பு திட்டத்திற்கு 2 கோடி வெள்ளி ஒதுக்கீடு!மனிதவள அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

பகான் டத்தோ மே 28-
நாட்டில் உள்ள 1 லட்சத்து 50,000 ஏழை இல்லத்தரசிகளை பாதுகாக்க சொக்சோ சமூக நல பாதுகாப்பு திட்டத்திற்கு அரசாங்கம் 2 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் அறிவித்தார்.

ஏழை இல்லத்தரசிகள் மீது அக்கறை கொண்டு 2023
பட்ஜெட்டில் அரசாங்கம் இந்த 2 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

கடந்த 2022 டிசம்பரில் மனிதவள அமைச்சு அறிமுகப்படுத்திய இல்லத்தரசிகள் சமூகநல பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

சமூக நல பாதுகாப்பு திட்டத்திற்கு தகுதியான இல்லத்தரசிகள் 120 வெள்ளி மட்டுமே பணம் செலுத்த வேண்டும்.

மாநில அரசுகள், அரசு நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள், அல்லது
இல்லத்தரசிகளுக்கான பங்களிப்பு ஸ்பான்சர்களாக வழங்கி உதவி புரியலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் சொக்சோ நிறுவனம் மற்றும் பேராக் மாநில அரசு ஏற்பாட்டில் பேராக் பகான் டத்தோவில் இன்று வேலை வாய்ப்பு கண்காட்சி மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.

துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மனிதவள அமைச்சர் சிவகுமார், பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன், ஊத்தாங் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் வசந்தி, சொக்சோ நிறுவனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ சுபாஹான் கமால், சொக்சோ நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் அஸ்மான் ஆகியோர் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles